Published on 03/09/2018 | Edited on 03/09/2018
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கமிட்டி, வருகின்ற சட்டப்பேரவையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கும் போட்டியாளர்களுக்கு என்று சில விதிமுறைகளை நியமித்துள்ளது.
வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமானால், பேஸ்புக் பக்கத்தில் பக்கம் வைத்திருக்க, அதை 15,000 பேராவது லைக் செய்திருக்க வேண்டும். ட்விட்டர் பக்கத்தில் 5000 பேராவது பின்தொடரவேண்டும், வாட்ஸப் குழு வைத்திருக்க வேண்டும். மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதள பக்கங்களை லைக் மற்றும் ரீட்வீட் செய்ய வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தொகுதி போட்டியாளர்களுக்கு தெரிவித்துள்ளது.