Skip to main content

முதுகலை மருத்துவ கலந்தாய்வை நீட்டிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

Supreme Court dismisses petition seeking extension of postgraduate medical consultation!

 

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்தக்கோரிய மனு நிலுவையில் இருப்பதால், முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

 

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், "முதுகலை மருத்துவ கலந்தாய்வை ஒருநாள் கூட நீட்டிக்கக்கூடாது" என வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், கலந்தாய்வை நீட்டிக்க மறுப்பு தெரிவித்து தமிழக அரசின் மனுவது தள்ளுபடி செய்தனர்.

 

ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் கலந்தாய்வு முடிந்த நிலையில், மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்