Skip to main content

போலீஸ் காவலில் உயிரிழந்த மகன்; போராடிய தந்தையிடம் திமிராக பேசிய டி.எஸ்.பி!

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
DSP threatens father whose son in police custody in Uttar Pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சந்திரா. இவர் தனது மூன்று நண்பர்களுடன் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு மரம் வெட்டச்  சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார் மதுபானம் கடத்தியதாக கூறி ராம்சநதிராவை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராமசந்திராவை போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் மூச்சு பேச்சு இன்றி மயங்கிக் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்சந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் போலீசார் கடுமையாகத் தக்கியதால் தான்ராம்சந்திரா உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ராம்சந்திரா சட்டவிரோத செயலில் ஈடுபடவில்லை என்றும், வேண்டும் என்றே காவல்துறையினர் அவர் மீது குற்றம்சாட்டுகின்றனர் எனக் கண்ணீர் மல்க புகார் தெரிவிக்கின்றனர். மேலும், ராமசந்திராவின் இறப்பிற்கு நியாம் கேட்டும், இழப்பீடாக ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிபி சிங், “ரூ.30 லட்சம் எல்லாம் தர முடியாது; எந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எத்தனை நாள் வேண்டுமானாலும் போராட்டம் நடத்திகோ. உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று மரியாதை குறைவாக அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார். 

மகனை பறிகொடுத்து விட்டு நியாயம் கேட்டு அழுது புலம்பிய தந்தையிடம் டிஎஸ்பி ஒருவரே மரியாதை குறைவாக பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்