Published on 13/11/2018 | Edited on 13/11/2018

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக உலவி வருகிறது. மேலும், குரங்குகளின் தொல்லை அதிகரித்துவிட்டதாக உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலகத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து செயலகம் ஒரு சுற்றரிக்கை ஒன்றை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் குரங்குகளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டாம், அதை தவிர்ப்பது நல்லது. குரங்குகளை கண்டதும் அச்சத்தில் ஓட வேண்டாம். அதன் மீது இரு சக்கர வாகனங்களை விட்டுவிட்டால், அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்று விடுங்கள். குரங்குகளை எந்த வகையிலும் வெறுப்பேற்றும் செயல்களில் ஈடுபட வேண்டாம். குரங்குகளை தனித்து இருக்க விடுங்கள், அப்போதுதான் அவை உங்களை தொந்தரவு செய்யாது. அவற்றை பொருட்படுத்தாமல் அமைதியாக கடந்து செல்லுங்கள் என்று அந்த சுற்றரிக்கையில் கூறப்பட்டுள்ளது.