ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மத்திய அரசுத்துறையாக கருத்துப்படுவது ரயில்வே துறை. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது. இதனால் அத்துறையில் பணியாற்றி வரும் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். தீபாவளி போனஸ் வழங்குவதன் காரணமாக 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் மட்டுமல்லாது எண்ணெய் நிறுவனங்களுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.