
இந்தாண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 98 பந்துகளில் 79 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 45 ரன்களும், அக்சர் பட்டில் 61 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த எளிய இலக்கை கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்துள்ளது.
இருப்பினும், நியூசிலாந்து அணி பந்துவீசும் போது அதன் வீரர்கள் பறந்து பறந்து லாபகரமாக பல கேட்ச்சுக்ளை பிடித்தனர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் சரியான உடல்வாகு இருந்தால்தான் இப்பாடி எல்லாம் கேட்ச் பிடிக்க முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் பலரும் நேர்த்தியான உடல்வாகுடன்(ஸ்லிம் அண்ட் ஃபிட்) இருப்பதை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஷித் சர்மாவின் உடல்வாகுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது எஸ்க் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத ‘ஈர்ப்புத்திறன் குறைந்த ஒரு கேப்டன் ரோஹித் ஷர்மா” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஷாமா முகமதுவின் இந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒருவரைத் திறமையை வைத்து பேசாமல், உருவத்தை வைத்து கேலி செய்வது என்ன மாதிரியான மனநிலை என்று பாஜக உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையின் உத்தரவின் பேரில் தற்போது அவரின் கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இருப்பினும் அவருக்கு எதிராக தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.