அனைத்து மாநிலங்களில் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வழிவகை செய்யும் அணை பாதுகாப்பு மசோதா, பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய தமிழக துணை முதல்வரின் மகனும், அதிமுகவை சேர்ந்த தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் எம்.பி ரவீந்திரநாத் குமார், அணை பாதுகாப்பு மசோதாவை தொலைநோக்கு பார்வையில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார் அதே போல் அணை பாதுகாப்பு மசோதாவானது. அணைகளை பாதுகாக்கவும், நீரை சமமாக பெறுவதற்கும், இந்த மசோதா உதவும் என்றார்.
ஏற்கனவே மாநிலங்களவையில் இன்று உபா சட்டத்திருத்த மசோதாவை (UAPA BILL), மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கொண்டு வந்தார். இந்த மசோதா மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்திற்கு பிறகு நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 147 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் கிடைத்த நிலையில் மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார். உபா சட்டத்திருத்த மசோதாவானது, சட்ட விரோத செயல்பாடு தடுப்பு சட்டமாகும். தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்றும், சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் உறுதி அளித்தார். UAPA- சட்டத்திருத்த மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியிருப்பதால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.