Published on 16/08/2018 | Edited on 16/08/2018

கடந்த ஒரு மாதமாக கேரளாவில் கனமழை பெய்து அங்கு வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இந்த பேரிடரால் சுமார் 8000 கோடிக்கு சேதம் அடைந்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவிதிருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து கேரள முத்ல்வரிடம் தொலைபேசியில் பேசினார். தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் படைகள் கூடுதலாக தேவைப்படுவதால், கேரளாவிற்கு மீட்புப்படை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கேரள அரசுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்று கூறினார்.