Skip to main content

சென்னை, நாகையை தொடர்ந்து டெல்லியில் 14 பேரை கைது செய்தது- "என்.ஐ.ஏ" அமைப்பு!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019


அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக எழுந்த புகார் அடிப்படையில் நாகையில் ஹசன் அலி, ஹரிஷ் முகமது உட்பட இருவர் வீடுகளிலும் சோதனை செய்தது  என்.ஐ.ஏ. அதன் பிறகு இருவரரையும் கைது செய்த "என்.ஐ.ஏ" அதிகாரிகள் சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் இன்று அதிகாலை கோவை உக்கடம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

 

CHENNAI AND NAGAI NATIONAL INVESTIGATION AGENCY RAID AND ARRESTED IN 14 PEOPLES FOR TODAY

 

 

 

அதனைத் தொடர்ந்து டெல்லியிலும் சோதனை செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்புடையதாக கூறி 14 பேரை கைது செய்துள்ளன. கைது செய்யப்பட்ட 14 பேரையும் விமானம் மூலம் சென்னை அழைத்து வரவுள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தன. சென்னைக்கு அழைத்து வந்தவுடன் 14 பேரையும் பூந்தமல்லியில் உள்ள "என்.ஐ.ஏ" சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளன.

சார்ந்த செய்திகள்