2018 - 19 நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய் ரூ. 12 இலட்சம் கோடி என நிர்ணயக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தியதால் நிர்ணயக்கப்பட்டுள்ள இலக்கை எட்டுவது சந்தேகம்தான் என்று தெரிவித்துள்ளது. மேலும் நிர்ணயக்கப்பட்டுள்ள வரம்பைவிட ரூ. 50 ஆயிரம் கோடி வரை குறையவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேசமயம் கடந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி-யில் 3.4 சதவீத அளவுக்கு வைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. ஆனால், நேரடி வரி வருவாய் தற்போது ரூ 50 ஆயிரம் கோடி வரை பற்றாக்குறை ஏற்படுவதால் ஜிடிபி-யில் அது பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.
கடந்த பட்ஜெட் தாக்கலின்போது நாட்டின் நேரடி வரி வருவாய் ரூ. 11.50 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது ரூ. 12 லட்சம் கோடியாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜிஎஸ்டி மூலமாக வரி வருவாய் ரூ. 7.44 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் திருத்திய மதிப்பீட்டில் இலக்கு குறைக்கப்பட்டு ரூ. 6.44 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.