டெல்லியில் தீபாவளிக்கு பிறகிலிருந்தே காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதனாலும், காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை குறைந்ததாலும் அங்கு காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த காற்று மாசு, பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லியின் காற்று மாசு அளவை கட்டுப்படுத்துவதற்காக, அவசரகால நடவடிக்கைகளை எடுக்க முழு அளவில் தயாராக இருக்குமாறு அம்மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை அறிவுத்தியுள்ளது.
மேலும், மக்கள் தங்களது வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வாகனங்களின் பயன்பாட்டை 30 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை அறிவுறுத்தியுள்ளது.