ஊழல் நிறைந்த மகாராஷ்டிரா, குற்றங்கள் நிறைந்த டெல்லி - தேசிய குற்றப்பிரிவு ஆணையம் தகவல்
இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் மாநிலமாக மகாராஷ்டிராவையும், குற்றங்கள் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் மாநிலமாக டெல்லியையும் தேசிய குற்றப்பிரிவு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதிகப்படியான ஊழல் வழக்குகளில் மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2016ம் ஆண்டில் மட்டும் 1,016 வழக்குகள் பதிவாகியதுதான் இதற்குக் காரணம். இதில் 569 வழக்குகளுடன் ஒடிசா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் பதிவான மொத்த ஊழல் வழக்குகளில் 22.9 சதவீதம் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் ஊழல் படிப்படியாக குறைந்துகொண்டே வருவதும், இத்தனை வழக்குகள் வெளியே வந்திருப்பதும் நல்ல செய்திதான் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமான 19 நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 40 சதவீத பாலியல் வன்முறை வழக்குகளும், 33 சதவீத பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளும் டெல்லியில் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.