Published on 26/11/2020 | Edited on 26/11/2020

மத்திய அரசின் விமான போக்குவரத்துத்துறை இயக்குனரகம் (Director General Of Civil Aviation) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. சில முக்கியமான வழித்தடங்களில் மட்டும் சிறப்பு விமான சேவை தொடர்ந்து செயல்படும். இந்த தடை உத்தரவு சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது' என குறிப்பிட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.