காங்கிரஸ் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சித் தலைமை பதவி, காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக மிகமுக்கிய விஷயமாகப் பார்க்கப்பட்டது, மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்டமைப்பை வலுப்படுத்துவது. இதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பின்படி, மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக அசாம் மாநில முன்னாள் முதல்வரின் மகன் கவுரவ் கோகோய், மாநிலங்களவைத் தலைமை கொறடாவாக ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக மக்களவையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்த சூழலில், தற்போது இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.