கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு படிப்படியாக சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதற்கிடையில் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் நாளை முதல் 1.70 லட்சம் பொதுசேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்றும், நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலைய கவுன்டர்களில் 2 அல்லது 3 நாட்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சற்று நேரத்திற்கு முன்பு தெரிவித்துள்ளார். மேலும் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும், ரயில்வே நிலையங்களில் கடைகளை திறக்கவும் விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்கலாம் என்ற அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து ரயில் நிலைய கவுன்ட்டரில் பயணிகள் டிக்கெட் வாங்க வேண்டும் ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.