சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிகவளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மிக குறைந்த அளவில் பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை இருந்தால் பகிருங்கள். சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.