உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 8 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 8 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று இதுகுறித்துப் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர், கரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதியளிக்கப்பட்ட 10 நாட்களில் இருந்து, அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் தடுப்பூசியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது குறித்த இறுதி முடிவை அரசாங்கமே எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். அவரதுக் கருத்துப்படி, ஜனவரி 13 முதல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படுகிறது.சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் ஆகிய 4 இடங்களில் மிகப்பெரிய தடுப்பூசி சேமிப்பு மையங்களும், நாடு முழுவதும் 71 சேமிப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.