Skip to main content

கரோனா பாதிப்பு: ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்குச் சென்ற இந்தியா!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

rft

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 
உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,55,414ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65,34,456 ஆக உள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,36,720ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இதுவரை கரோனா பாதிப்பில் நான்காம் இடத்தில் இருந்து வந்த இந்தியா தற்போது ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது. 6.8 லட்சம் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களைக் கொண்ட ரஷ்யாவை, நேற்று மாலை இந்தியா முந்தியது. இந்தியாவில் தற்போது 6,97,836 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்