Skip to main content

அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பு! 

Published on 13/04/2018 | Edited on 13/04/2018

உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாடாவ்ன் மாவட்டத்தில் கெடி சௌக் ஏரியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு இரும்பினால் செய்யப்பட்ட கேட் போடப்பட்டு அதற்கு காவலர் ஒருவரும் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

 

Defense of Ambedkar statue


தற்போது அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி வீரேந்திர சிங் யாதவ் கூறியது : 
 

நாளை அம்பேத்கர் ஜெயந்தி என்பதால் ஒரு சில சமூக விரோதிகள் சிலையை உடைத்து சேதப்படுத்தக்கூடும். அதனால் 24 மணி நேரமும் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

இதற்கு முன் சென்ற வாரம் இதே மாவட்டத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் வைத்த அம்பேத்கர் சிலைக்கு காவி நிறம் பூசியது பெரும் சர்ச்சையானது. அதற்கு பிறகு நீல நிறம் பூசப்பட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் நினைவு நாள்: நடக்க இருந்த மோதலை தடுத்து நிறுத்திய போலீஸ்!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

 

சட்டமேதை அம்பேத்கரின் 65ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல அரசியல் கட்சியினரும் இன்று காலையில் இருந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

இந்த நிகழ்ச்சிக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் மாலை அணிவிக்க வந்தனர். அதே நேரத்தில் அவர்கள் மாலை அணிவித்து விட்டு கீழே இறங்கும் போது அகில பாரதிய வித்யார்த்தி பரிசித்  அமைப்பினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மேலே ஏறியுள்ளார்கள்.

 

அப்போது இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாற இருந்தது. அதற்குள்ளாக போலீசார் உடனடியாக இருதரப்பினர் இடையே நடக்க இருந்த மோதலை தடுத்து நிறுத்தினார்கள்.

 

 

 

Next Story

அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அரசியல் பிரமுகர்கள்! (படங்கள்)

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு நாளையொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவருடைய திருவுருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செய்துவருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, பாமகவின் துணை பொதுச் செயலாளர் ஏ.கே. மூர்த்தி ஆகியோர் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.