Published on 24/06/2019 | Edited on 24/06/2019
இந்திய வான்படை விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை, தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கான பதில் தாக்குதலை இந்தியா நடத்திய போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். பின்னர் இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தின் பேரில் அவர் பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அபிநந்தனுக்கு அவரது வீரத்தை பாராட்டும் வகையில் விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.