Skip to main content

காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு பிரியங்காவின் ஆடியோ மெசேஜ்!

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தல் மே - 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி  கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி  உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதன் காரணமாக  டெல்லியில் அனைத்து கட்சித் தலைவர்களும் முகாமிட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

 

 

rahul

 

 

அதில் அவர், "எனது அருமை காங்கிரஸ் கட்சித் தொண்டர்களே, சகோதர்களே, சகோதரிகளே... வதந்திகளும், கருத்துக்கணிப்பு முடிவுகளையும் பார்த்து நம்பிக்கை இழக்கச் செய்யாமல் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உறுதியான நிலைப்பாட்டையை உடைக்கவே இத்தகைய வேலை செய்யப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். வாக்கு எண்ணிக்கை மையங்கள், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் அருகே தொடர்ந்து உங்கள் பார்வையை வைத்திடுங்கள். நமது கூட்டு முயற்சிக்கும் நிச்சயம் பலன் கிட்டும்" என காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.  ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு மாநில கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் தொடர்ந்துக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்