Skip to main content

ராகிங் என்ற பெயரில் உள்ளாடையுடன் நடனம்... ஜூனியர்களை சீண்டிய சீனியர் மாணவர்கள்..!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019


ஒடிசா மாநில அரசின் நிதி உதவியுடன் சுரேந்தர் சாய் டெக்னிக்கல் பல்கலைக்கழகம் புவனேஸ்வரில் இயங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஒரு மேடையில் உள்ளாடையுடன்  நடனம் ஆடும் வீடியோ இணையதளங்களில் வெளியானது. இவர்களை இப்படி ஆடச் சொல்லி ராகிங் என்ற பெயரில் சீனியர் மாணவர்கள் அவர்களை தொந்தரவு செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் இந்த வீடியோ குறித்த உண்மைத்தன்மை அறியும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
 

f



இந்நிலையில், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணையில் இறங்கியது. 150க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், ராகிங் நடைபெற்றது உண்மை என்பது விசாரணையின் முடிவில் தெரியவந்ததுள்ளது. இது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான 10 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் அவர்களுடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டதற்காக உடனிருந்த  56 மாணவர்களுக்கு ரூ. 4000 அபராதம் கட்ட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்