தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடியிடம் தென்னிந்தியாவில் புதிதாக அரசியலில் கால் பதித்துள்ள ரஜினி, கமல் ஆகியோருடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மோடி கூறியதாவது,
2014ஆம் ஆண்டிலிருந்தே நிறைய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. எனவே பாஜக தனது அடித்தளத்தை தொடர்ந்து விரிவுபடுத்த பாடுபட்டு வருகிறது. எங்களோடு வர விரும்பும் அனைவரையும் ஒன்று சேர்த்து, அரவணைத்து செல்ல தயாராக இருக்கிறோம்.. இது பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் நோக்கத்திற்கானது எனக்கூறினார்.
மேலும் கூறுகையில்,
வரும் 2019 பாராளுமன்ற தேர்தல் மக்களுக்கும் மெகா கூட்டணிக்கும் இடையே நடக்கும் மோதலாக இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகள் பாஜக அரசு செய்த பணிகளை மக்கள் எண்ணிப்பார்த்து வாக்களிப்பார்கள் எனக்கருத்துகிறேன். மக்களின் அறிவுக்கூர்மை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
இதன்மூலம் மோடி அலை ஓய்ந்துவிட்டதாக கூறும் சிலர் மோடி அலை ஓய்ந்துவிடவில்லை இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி எனக்கூறினார்.