இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செயல்பட்டு வந்த இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூதரகம் சுமுகமாகச் செயல்பட இந்தியாவின் சிறப்பு உதவிகள் இல்லாதது, பணியாளர் எண்ணிக்கை குறைப்பு, தாலிபான் அரசு நியமிக்கும் தூதருக்கு இந்தியா சட்ட அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதே சமயம் தாலிபான் அரசை இந்தியா அங்கீகரிக்கும் வரை தூதரக விவகாரத்தில் முடிவு எட்டப்படாது எனவும், இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதால் வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், இந்தியாவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.