Skip to main content

உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் வாகனங்கள், போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாகவும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி, அசாம், உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் நாளை காலை 09.00 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

citizenship amendment bill 2019 union home minister discussion with officers


 

இந்த நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சக உயரதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் உள்துறை செயலர், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்துகிறது. 


 

சார்ந்த செய்திகள்