ரூ.7,220 கோடி அந்நிய முதலீட்டு மோடி செய்த ஸ்ரீ கணேஷ் ஜூவல்லரி ஹவுஸ் நகைக்கடைக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ கணேஷ் ஜூவல்லரி ஹவுஸ் என்ற நகைக்கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 20 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 தனியார் வங்கிகளிடம் இருந்து ரூ.2,672 கோடி கடன் பெற்று அதனைத் திருப்பி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்குத் தொடர்பாக நிலேஷ் பரேக் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அந்த நகைக்கடை வெளிநாட்டு ஏற்றுமதி என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளதை அமலாக்கத் துறையினர் கண்டறிந்துள்ளனர். ரூ.7,220 கோடி அளவுக்கு இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மூவர் மீது அன்னிய செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.