Skip to main content

சோட்டா ராஜன் சகோதரருக்கு சீட் வழங்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த இருகட்சிகளுடனும் வேறு சில சிறு கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

 

chotta rajan brother replaced in maharashtra election

 

 

சிவசேனாவுக்கு 124 தொகுதிகளும், பாஜகவுக்கு 144 தொகுதிகளும் என சமீபத்தில் தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டது. மீதமுள்ள இடங்கள், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சிக்கு பாஜக 6 தொகுதிகளை ஒதுக்கியது.

இதற்கான வேட்பாளர் பட்டியலை ராம்தாஸ் அத்வாலே வெளியிட்ட நிலையில், நிழல் உலக தாதாவான சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜே பெயர் அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்திருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சோட்டா ராஜனின் தம்பிக்கு வழங்கப்பட்ட தொகுதியில் வேறு வேட்பாளர் போட்டியிடுவார் என்று இந்திய குடியரசு கட்சி அறிவித்துள்ளது. அதன்படி தீபக் நிகல்ஜே போட்டியிடுவதாக இருந்த பல்தான் தொகுதியில் அவருக்கு பதிலாக திகம்பர் அகவானே போட்டியிடுவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்