லடாக்கில் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
இந்தியா, சீனா இடையே பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், இருநாட்டு அதிகாரிகளும் அமைதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சீனா இப்பகுதியில் ஆயுத பலத்தை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பதிலடி தரும் வகையில் ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், லடாக்கில் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
லடாக்கின் சுமர்-டெம்சோக் பகுதியில் நுழைந்த அந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் சிறை பிடித்துள்ளது. அவர் இந்திய எல்லைப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்திருக்கக் கூடும் என்றும், அவரை சீன ராணுவத்திடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான பணிகள், ராணுவ நெறிமுறைகளின்படி நடைபெறும் என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.