Skip to main content

டெல்லி கிளம்பிய தமிழக முதல்வர்; நிபந்தனை விதித்த ஆம் ஆத்மி

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

nn

 

பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை எதிர்க்கட்சிகள் மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருந்து தமிழக முதல்வர் பாட்னா கிளம்பியுள்ளார்.

 

இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் பாட்னா புறப்பட்டுள்ளனர்.

 

இந்த எதிர்க்கட்சிகள் மாநாட்டை நடத்தும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அண்மையில் ஆம் ஆத்மி சார்பாக டெல்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான அதிகாரம் டெல்லி மாநில அரசுக்கு உண்டா அல்லது மத்திய உள்துறை  மூலமாக நியமனம் செய்யலாமா என்பது தொடர்பாக அதிகார மோதல் இருந்தது. இது தொடர்பாக பாஜக அல்லாத மாநில முதல்வர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். இந்நிலையில் இக்கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். டெல்லியில் உயர் அதிகாரிகள் நியமனம் செய்வதற்கான அதிகாரம் மாநிலத்திற்கே உள்ளது என்பதற்கு காங்கிரஸ் வலிமையான ஆதரவை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்