7 கட்ட மக்களவை தேர்தலும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக தான் ஆட்சியமைக்கும் என கூறின. இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு குறித்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தலின் முடிவுகள் அல்ல. முதலில் அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான கருத்து கணிப்புகள் தவறாகவே இருந்துள்ளன. அண்மைக் காலமாக, அரசியல் நாகரிகம் குறைந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் பண்பாடு சிதைந்துள்ளது. ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் விமர்சித்து கொள்கிறார்கள். அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, எதிர்ப்பாளர் மட்டுமே. இந்த அடிப்படை உண்மையைக் கூட மறந்து விட்டனர்" என தெரிவித்துள்ளார்.