அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயிலுக்கான பூமி பூஜை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொண்ட மோடி 40 கிலோ எடை கொண்ட வெள்ளி அடிக்கல்லை நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தார். கடந்த ஒன்றரைவருடங்களாக அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று, ராமர் கோயிலுக்கான கருவறை பணிக்கு இன்று அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு துறவிகள், மடாதிபதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கோயில் கட்டுமான பணி வரும் 2024ஆம் ஆண்டு துவக்கத்தில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.