சண்டிகர் ராணுவ வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து
பஞ்சாப் மாநிலம், பதிண்டா மாவட்டத்தில் ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் நேற்று அதிகாலை 5.10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இது சுமார் 6.30 மணிக்கு அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் இல்லை. இது தொடர்பாக பாணிட்டா துணை ஆணையர் டிப்ரவா லாக்ரா கூறுகையில், “வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து ராணுவம் மதிப்பிடும்” என்றார். குறைந்த மின்னழுத்தத்தினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.