தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், இந்தியாவில் சில மாநிலங்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளன. சில மாநிலங்கள் பசுமை பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதியளித்துள்ளன. இந்தச்சூழலில் மேற்குவங்க மாநிலத்தில், பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டும் அம்மாநில அரசு அனுமதியளித்திருந்தது.
இந்தநிலையில் கரோனா காலத்தில், மக்களின் ஆரோக்கியத்திற்கான உரிமையை பாதுகாக்கப் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்குவங்கத்தில் பசுமை பட்டாசு உட்பட அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு மட்டுமின்றி இந்த வருடம் நடைபெறவுள்ள சத் பூஜை, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதித்தும் மேற்குவங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.