பயணிகளுடன் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி பாலத்தின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தது மத்தியப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் என்ற இடத்தில் பாலத்தில் பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்திலிருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பாலத்திலிருந்து பேருந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.