தேசிய விளையாடுக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டு "விளையாடு இந்தியா திட்டம்" செயல்படுத்தப்படும். ஸ்டார்ட் அப் துறையை ஊக்குவிக்க "தூர்தர்ஷனில் தனியே சேனல் தொடங்கப்படும். கழிவு நீர் சுத்திகரிப்புக்காக ரோபோக்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர் முன்னேற்றத்திற்க்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். 2024 ஆம் ஆண்டிற்குள் அனைவரின் இல்லத்திலும் சமையல் எரிவாயு இருக்கும் என பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச அளவில் டாப் 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம் பெறவில்லை. ஆனால், இன்று இந்த டாப் 200 பட்டியலில் மூன்று இந்தியக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. ‘இந்தியாவில் படியுங்கள்’ என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவை உயர் கல்விக்கான மையமாக உருவாக்கி வெளிநாட்டு மாணவர்களையும் இந்தியாவை நோக்கி வரச் செய்வோம்”- அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
”2022-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் மின்சார சேவை உடன் எல்பிஜி வசதியும் செய்து கொடுக்கப்படும். அனைத்துத் திட்டங்களும் கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் நலனை மையப்படுத்தியே செயல்படும். பிரதான் மந்திரி திட்டம் மூலம் மக்களுக்கான வீடுகள் கட்டித்தரும் பணி 314 நாட்கள் எடுத்து வந்தது. இப்பணி இனி புதிய டிபிடி தொழில்நுட்பம் மூலம் 114 நாட்களிலேயே முடித்துக் கொடுக்கப்படும்”.