/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2629.jpg)
கேரளாவில் இருந்துசெவிலியர் மற்றும் படித்த இளம் பெண்களை அரபு நாடுகளில்சூப்பா்மார்க்கெட்போன்ற கடைகளில் அதிக சம்பளத்துடன் வேலை செய்வதற்காக ஆசை வார்த்தைகள் கூறிஅழைத்துச்சென்று அங்கு அடிமை வேலைகளில் ஈடுபடுத்துவதோடு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான பாலியல் தேவைகளுக்குசப்ளைசெய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தகொடுமையிலிருந்துதப்பி வந்த 31 வயது இளம் பெண், கொச்சிகமிஷனரிடம்புகார் கொடுத்துள்ளார். இதுசம்பந்தமாகவிசாரணை நடத்தி வரும்போலீசார், கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 4 ஆண்டுகளாக இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி 200க்குமேற்பட்டவர்களைஅரபு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் 90சதவீதபெண்களை வீட்டு வேலைக்குஅடிமைத்தனமாக இருக்க வற்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். ஏராளமான பெண்களைசிரியாவில்ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அவர்களின் பாலியல் தேவைகளுக்காக அனுப்பியுள்ளனர். இதுஎல்லாம் தெரிந்தே திட்டமிட்டு அந்த நிறுவனம் அனுப்பி வந்துள்ளது.
இதுசம்பந்தமாகதரகராகச்செயல்பட்ட கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பானுஃபர்கானாமற்றும் கண்ணூரைச் சேர்ந்தமஜீத்,பத்தணம்திட்டயைச்சேர்ந்தஅஜிமோன்ஆகியோர் மீது கொச்சிபோலீசார்வழக்குப் பதிவு செய்துஅவர்களைத்தேடி வந்தனர். இதில் பானுவின் வீட்டைபோலீசார்சுற்றி வளைத்த போது, அவர் தப்பிகுவைத்துக்குசென்று தலைமறைவானார். அதே போல்மஜீத்பக்ரைனியில்உள்ளார்.
இதனைத் தொடர்ந்துஃபர்கானாமற்றும்அஜிமோன்முன் ஜாமீன் கேட்டுஎா்ணாகுளம்ஐகோர்ட்டில்மனுதாக்கல்செய்தனர். இதில் இருவருடைய மனுக்களும்தள்ளுபடிசெய்யப்பட்டது. இதனையடுத்துஅஜிமோன்எா்ணாகுளம்கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும்ஃபா்கானாதலைமறைவாகியுள்ளார் இதனையடுத்துஅவர்வெளி நாடுதப்பிச்செல்லாதபடி அவரின்பாஸ்போட்டைமுடக்கி கேரளாபோலீசார்நடவடிக்கைஎடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)