Skip to main content

ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி,மீ வரை பயணிக்கலாம் - டாடா மோட்டார்ஸ்

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்து 200 கி.மீ வரை பயணிக்கக்கூடிய வகையில் தனது புதிய ரக மின்சார வாகனத்தை வடிவமைத்துவருவதாக அறிவித்துள்ளது. 

 

tata

 

காற்று மாசு மற்றும் எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட காரணங்களால் அநேக வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை மின்சாரம்கொண்டு இயங்கும் வடிவில் தயாரிப்பதில் ஈடுபட்டுவருகின்றன.


அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அதன் வாகனங்களில் சிலவற்றை மின்சாரம்கொண்டு இயங்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது அந்நிறுவனம் அதன் புதிய ரக வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 200 கி.மீ வரை பயணிக்கும் வகையில் வடிவமைத்துவருவதாக என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு” - டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Investment of Rs.9 thousand crores TN Govt Agreement with Tata Company

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காகத் தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.3.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

அதாவது தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே. விஷ்ணு, டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் வி. அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் கி. செந்தில்ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story

டாடா மோட்டார்ஸுக்கு கைமாறும் ஃபோர்டு ஆலை! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Ford plant to transfer to Tata Motors!

 

குஜராத் மாநிலத்தில் உள்ள ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 750 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. 

 

குஜராத் மாநிலம், சனந்த் நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட்டது. இதனையடுத்து, டாடா நிறுவனம், பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஆலையை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் ஏற்கப்பட்டது. 

 

ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், டாடா மோட்டார்ஸ் முன்வந்துள்ளது.  

 

ஏற்கனவே, சென்னையை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு ஆலையின் கார் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார் விற்பனை குறைவு உள்ளிட்ட காரணங்கள் இந்தியாவில் குஜராத் மற்றும் சென்னை ஆலையில் உற்பத்தியை முற்றிலுமாக ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது.