குறைந்த பட்ஜெட் வீடுகள் வாங்குவோருக்கான வரிச்சலுகை ரூ.3.5 லட்சமாக அதிகரிப்பு. ரூபாய் 5 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வரி விலக்கு தொடரும். பான் கார்டு (PAN CARD) இல்லாமலும் ஆதாரை (AADHAR CARD) கொண்டு வருமான வரியை செலுத்தலாம். மின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஏர் இந்தியா (AIR INDIA) பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. வருமான வரிக்கணக்குகளை மின்னணு முறையில் பரிசோதிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ரூபாய் 1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும். வருமான வரி தாக்கல் செய்ய இனி பான் கார்டு இன்றி ஆதார் அட்டை மூலமாகவே செலுத்த முடியும். வருமான வரி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாகவே பதிலளிக்க முடியும். வங்கிகளின் வாராக்கடன் குறைந்துள்ளது. மோசமான நிலையிலிருந்த ஆறு பொதுத்துறை வங்கிகள் மீட்கப்பட்டுள்ளன”. அதே போல் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மேலும் எளிமைப்படுத்தப்படும்.