Skip to main content

பாஜக கட்சியினரிடம் 8 கோடி ரூபாய் பணம் பறிமுதல்: காவல்துறை அதிரடி...

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

8 crore cash seized in telangana from bjp workers

 

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக உதவியாளர் ஒருவரிடம் சரியான ஆவணங்கள் இன்றி 8 கோடி ரூபாய் பணத்தை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி நாராயண்குடா பகுதியில் வந்த ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த பணத்தை கொண்டு வந்தவர்கள், இந்த பணம் பாஜக உதவியாளர் கோபி என்பவருடைய பணம் என தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து கோபியை தேடி வங்கிக்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அப்போது கோபியுடன் ரூ. 6 கோடி பணத்துடன் 4 பேர் அங்கு நின்றுள்ளார். அவர்களிடம் பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் ரூ. 8 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில்  தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக சார்பில் தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்