நேபாளத்தில் விமான விபத்து நிகழ்ந்ததில் தற்போது வரை 16 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து பொக்காரா விமான நிலையத்திற்கு எட்டி ஏர்லைன்ஸ் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 72 இருக்கைகள் கொண்ட விமானத்தில் 68 பயணிகளும் 4 ஊழியர்களும் பயணித்துள்ளனர்.
விமானம் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது மோசமான வானிலையின் காரணமாக விபத்துக்குள்ளானது. பழைய விமான நிலையம் மற்றும் பொக்காரா விமான நிலையத்திற்கு இடையில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் விமானம் தீப்பற்றி எரிந்தது. பயங்கர விபத்து நிகழ்ந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது நெடுநேரமாகத் தெரியவில்லை.
#WATCH | A passenger aircraft crashed at Pokhara International Airport in Nepal today. 68 passengers and four crew members were onboard at the time of crash. Details awaited. pic.twitter.com/DBDbTtTxNc
— ANI (@ANI) January 15, 2023
மீட்புக்குழுவினர் வந்த பின் தீயினை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “விமானத்தில் பயணித்தவர்களில் 16 பேர் தற்போது வரை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் ஏராளமானோர் இறந்திருக்கலாம்” என்றும் கூறினர்.