வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், நம் நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்ய நடவடிக்கை மற்றும் வணிகம், விமான போக்குவரத்து துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு புதிய சீர்த்திருத்தம் கொண்டு வரப்படும். பிரதம மந்திரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 1.9 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்.
2022 ஆம் ஆண்டிற்குள் 1.90 கோடி வீடுகளில் மக்கள் குடியேறுவார்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. சாகர் மாலா மற்றும் பாரத் மாலா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 80,250 கோடியில் சுமார் 1,25,000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும். 50 ஆயிரம் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை. 75 ஆயிரம் தொழில் முனைவோருக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.