13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று வாகை சூடியுள்ளது. இந்திய திரும்பியுள்ள இந்திய வீரர்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.
இந்திய நேரப்படி நேற்று சரியாக 1:30 மணிக்கு புறப்பட்ட இந்திய வீரர்கள் காலை 7 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். இன்று அவர்கள் தங்கியுள்ள ஐடிசி தனியார் விடுதிக்கு பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில் ,10:00 மணிக்கு மேலாக விடுதியில் இருந்து புறப்பட்டு பிரதமரை நேரில் சந்திக்க இருக்கின்றனர். அவருடன் காலை உணவு அருந்திய பின்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வாழ்த்துக்கள் பகிரப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மதியம் 4 மணி அளவில் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டு மாலை 5 மணிக்கு வெற்றிப் பேரணி நடைபெற இருக்கிறது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பொழுது தோனி தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் கோப்பை எடுத்துச் சென்று வான்கடே மைதானத்தில் வெற்றிவிழா கொண்டாடினார்களோ அதேபோன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து மணிக்கு மும்பையில் இருக்கும் மரைன் பகுதியிலிருந்து தொடங்கும் இந்த பேரணி வான்கடே மைதானம் வரை கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் ஏற்கனவே அறிவித்தபடி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.