
டெல்லியில் பொதுமக்களுக்கு கரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசை அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. 'ஒமிக்ரான்' நோய்த்தொற்றால் மட்டும் சுமார் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, டெல்லி மாநில துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு பின் பேசிய டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "தங்கள் மாநிலத்தில் இரண்டு தவணை கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்கள், மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இனி புதிதாக பதிவாகும் அனைத்து கரோனா தொற்றுகளும், ஒமிக்ரான் வகையைச் சேர்ந்ததா என ஆய்வு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.