![BJP PM consults with ruling state chief minister](http://image.nakkheeran.in/cdn/farfuture/pHTBXco7sYZsh3TD77XdPaeC9PIvMdNGSGdKz0E5E1Q/1639483340/sites/default/files/inline-images/naend44343.jpg)
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை நேற்று (13/12/2021) திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பிரதமர், இரவு ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (14/12/2021) பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும், பீகார், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் துணை முதலமைச்சர்களும் பங்கேற்றனர்.
அடுத்து வரவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு தயாராவது குறித்தும், மத்திய அரசின் திட்டங்களின் அமலாக்கம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.