Skip to main content

கண்டிப்பாக மக்களவை தேர்தலில் போட்டியிடுவோம்- ஆந்திர ’பவர்ஸ்டார்’

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
pawan kalyan


நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பவன் கல்யாண், டிசம்பர் 7ஆம் தேதி நடக்க இருக்கும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 
 

ஜன சேனா கட்சி தெலுங்கானா சட்ட மன்ற தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை, அடுத்த வருடம் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் கலந்துகொள்ள உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
 

”ஏற்கனவே போடப்பட்ட திட்டப்படி ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் நடைபெற்றிருந்தால், ஜன சேனா கட்சி கண்டிப்பாக போட்டியில் கலந்துகொண்டிருக்கும். ஆனால், சட்டமன்ற தேர்தல் முன்னரே அறிவிக்கப்பட்டதால், நாங்கள் இன்னும் போட்டிக்கு தயாராகவில்லை. உணர்ச்சிமயமான கட்சியான எங்களுக்கு மிகவும் கடினமானது” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

டீசர் சர்ச்சை; பவன் கல்யாண் படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Pawan Kalyan's film crew Election Commission notice

ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. ஸ்ரீலீலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் நவீன் ஏர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தி்ன் டீசர் கடந்த 19ஆம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இந்த டீசர் மூலம் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. 

அதாவது, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கவுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த தேர்தலில், அரசியல் கட்சித் தலைவரான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார். 

இந்த நிலையில், பவன் கல்யாண் நடித்திருக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில், ஒரு காட்சியில் ‘டீ கிளாஸ் ஒன்று குளோசப்பில் காட்டப்படுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாணி ஜனசேனா கட்சியின் சின்னமான டீ கிளாஸை டீசரில் காட்டியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, பவன் கல்யாண் தனது கட்சி சின்னத்தை டீசரில் காட்டியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரா தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார், “நான் டீசரை பார்க்கவில்லை. எனவே, நான் அதில் கருத்து கூற முடியாது. ஆனால் விளம்பரத்திற்காக டீ கிளாஸை உயர்த்தி காட்டினால் அது அரசியல் விளம்பரமாகவே கருதப்படும். இப்படி அரசியல் விளம்பரங்கள் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும், அத்தகைய விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம். அரசியல் விளம்பரம் என்றால் அந்த படக்குழுவினருக்கு நோட்டீஸ் கொடுப்போம். அவர்கள் முன்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.