Published on 04/02/2022 | Edited on 04/02/2022

இந்தியாவில் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டு 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் நிறுவனம், இரண்டாவது டோஸ் மட்டும் பூஸ்டர் டோஸ்களுக்கான இடைவெளியை 3 மாதங்களாக குறைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக் மாண்டவியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் சீரம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.