உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்திய நேபாளம் எல்லையான சோனாலி பகுதியில் சுற்றித்திரிந்த பயாஸ் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், அப்பகுதியில் தினம்தோரும் மொழி தெரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இதனைப் பார்த்த ஆதிதலி என்பவர் 'ஆஸ்பிரஸ் லைவ்ஸ்' அறக்கட்டளைக்கு தொடர்புகொண்டு தகவல் கூறியுள்ளார். டிசம்பர் 14ஆம் தேதி பயாஸுடன் தொடர்புகொண்டு சில விவரங்களைப்பெற்று அதன் மூலமாக இவர் மலப்புரம் மாவட்டம், கேரளாவைச் சேர்ந்தவர் எனக் கண்டறிந்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக தன் மகனை தேடிவந்ததாகவும், தற்போது கிடைத்துள்ள நிலையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவரது தந்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அறக்கட்டளையைச் சேர்ந்த பாரிஹா சுமன், “நாங்கள் இதுவரையிலும் இந்தியா முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம். அந்த வகையில் உத்தரப்பிரதேசம் பகுதியில் வாழும் ஆதிதலி என்பவரின் அம்மாவை நாங்கள் கேரளாவில் இருந்து கண்டுபிடித்து கொடுத்தோம். அதன் அடிப்படையில் அவர், என் அம்மாவைப் போலவே இளைஞர் ஒருவர் சுத்தித் திரிகிறார். அவரையும் அவர் குடும்பத்தில் சேர்த்துவிடுங்கள் என்று சொன்னதும், நாங்கள் அவர் பேசும் மொழி, அவர் சொன்ன சில இடங்களை வைத்துப் பார்த்து கேரளா எனத் தெரிந்தநிலையில், அவரின் ஊரைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவரிடம் விசாரித்தோம். அவர் தெரியவில்லை என்றார். அதன்பிறகு கடைகளின் தொலைப்பேசி எண்மூலம் விசாரித்ததில், ரெடி மில் கடையின் மூலம் தகவல்கிடைத்தது. அவரது தந்தையை எங்களிடம் பேசவைத்ததின் மூலமாக அவர்களிடம் ஒப்படைத்தோம்.
இந்தத் தகவல் கிடைக்கும் வரை, அவரை எங்கும் போகவிடாமல் பாதுகாப்பாக வைத்திருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 'ஆதிதலி' அவர்களுக்குத்தான் இந்த பெருமைசாரும்.
குடும்பத்துடன், பெங்களூரில் இருந்து கேராளா செல்லும்போதுதான் பயாஸ், ரயில்மாறி உத்தரப்பிரதேச ரயிலில் சென்றுள்ளார். இதன் மூலமாக தன் மகனை தொலைத்துள்ளனர். தன் மகனைப் பார்த்தவுடன் அவர் மிகுந்த சமந்தோஷம் அடைந்தார். இது எங்களுக்கு மனநிறைவு தருகிறது” என்றார்.