Published on 23/08/2021 | Edited on 23/08/2021
![ரக](http://image.nakkheeran.in/cdn/farfuture/fhRpUyuLR2LO5lMb4YxQiIwMK_R3ZfB9cnDqtGv4pFo/1629683898/sites/default/files/inline-images/221_12.jpg)
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கல்யாண் சிங், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். உ.பி. முதல்வராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, கல்யாண் சிங்கின் உடல் வைக்கப்பட்டிருந்த, தேசிய கொடி போர்த்திய பெட்டியின் மீது, பாஜக கொடியை வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கொடி மீது எப்படி பாஜக கொடியை வைக்கலாம் என்று நட்டாவுக்கு இணையதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.