Published on 05/09/2018 | Edited on 05/09/2018
![mary kom](http://image.nakkheeran.in/cdn/farfuture/lzMfuwXtWZPaUeJxsCUjusc9yXnYI7vrTWDmkkZAe5c/1536149948/sites/default/files/inline-images/mary-com-in.jpg)
ஐந்து முறை உலகக் குத்து சண்டை சாம்பியன் எம்.சி. மேரி கோம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விளம்பரத் தூதராக (brand ambassador) இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தொலைக்காட்சி விளம்பரங்களிலும், அச்சு ஊடகங்களிலும் இவரின் மூலம் விளம்பரம் செய்யப்படும் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்.சி.மேரி கோம் "மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களைவிட பி.எஸ்.என்.எல். நிறுவனம் நம்பகத்தன்மையானது. மற்ற நிறுவங்களால் சென்று சேர முடியாத இடத்திற்கும் பி.எஸ்.என்.எல். தனது சேவையை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களின் போதும் சேவையை தரும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான்" என்று கூறினார்.