Skip to main content

மேற்குவங்க அரசு மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறது பாஜக

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

 

bb

 

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு  தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது என இன்று மேற்குவங்க அரசு மீது தலைமை தேர்தல் ஆணையத்திடம் பாஜக தலைவர்கள் குழு புகார் அளிக்கவுள்ளது. இந்த குழுவில் நிர்மலா சீத்தாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் பூபேந்திர யாதவ் ஆகியோர் உள்ளனர். 

 


ஏற்கனவே சி.பி.ஐ மற்றும் மேற்குவங்க காவல்துறை இடையேயான பிரச்சனை தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டமும் நடத்திவருகிறார். இந்த நேரத்தில் பாஜக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவிருப்பது தேசிய அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்